கஹட்டோவிட்ட மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தால் ( KSWA) ஊரின் முக்கிய தேவைகளில் ஒன்றான கிராம சேவகர் காரியாலயம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்.

 குவைத்தில் வாழும் கஹட்டோவிட்ட மற்றும் அதனை அண்மித்து காணப்படும் ஓகடபொல மற்றும் அயல் ஊர்களை சேர்ந்த  மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம்   KSWA என்ற சங்கத்தின் மூலம் பல்வேறு சமூகப்பணிகளையும் பொதுச்சேவைகளையும் கடந்த காலங்களில் ஆற்றி வந்துள்ளமை யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த வேலைத்திட்டமாக கஹட்டோவிட்ட தபால் கந்தோர் நிர்மாண பணியை குறிப்பிடலாம்.

இதேவரிசையில் கஹட்டோவிட்டாவில் மிக முக்கிய தேவையாக காணப்படும் ஒரு வேலைத்திட்டம் தொடர்பான தீர்மானம் எடுப்பதற்கான  கூட்டம் ஒன்று சங்கத்தின் தலைவர் சகோதரர் அனீஸ் அவர்களின் தலைமையில்  குவைத்திலுள்ள IPC- Islam presentation committe ,kebed கேட்போர்  கூடத்தில் நேற்று (21) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விசேடமாக கஹட்டோவிட்டாவின் அத்தியாவசிய தேவையாக காணப்பட்டு வரும் கிராம சேவகர் காரியாலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் ஏற்கனவே இச்சங்கத்தால் கட்டப்பட்ட தபால் கட்டிடம் பழுதடைந்து காணப்படுவதாலும்,

 இதை சீரமைத்து அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் குறித்த கிராம சேவகர் காரியாலய கட்டிடத்தை கட்டுவதற்கான தீர்மானமும்  ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் செயலாளர்  சகோதரர் அஹ்கம் முஹம்மத் தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டதாகவும் அனைவரும் தம்மால் முடிந்த பங்களிப்புக்களை வழங்கியதாகவும் மற்றும் சிலர் பங்களிப்பு நல்குவதாக வாக்களித்திருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் இதற்கான வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கூட்டத்தின் போதான காட்சிகளை படங்களில் காணலாம்.

நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.