இந்நாட்களல் சிறுவர்கள் மத்தியில் பல்வகை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்புலுவென்சா மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவையும் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால் வைத்தியரின் உதவியைப் பெறுவது அவசியமென குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.