அமெரிக்க ஒஸ்கார் விருது பெற்ற பாடகியும் நடிகையுமான ஐரீன் காரா காலமானார்.

புளோரிடாவில் வீட்டில் இருந்த போது அவர் உயிரிழந்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

63 வயதில் இறந்த ஐரீன், ஒஸ்கார் மற்றும் கிராமி உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களைப் பாடுவதில் தனித் திறமை கொண்டவர்.

1984 இல், ஐரீன் சிறந்த பாடலுக்கான அகடமி விருதையும் 1981 இல் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதையும் வென்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.