யால செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

யால பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வன விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த ஓய்விடத்தை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய தௌிவு படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை 56 மில்லியன் ரூபாவாகும். 

அதற்கமைவாக, யால பூங்காவில் உள்ள கடற்பரப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இளைப்பாறுவதற்காக இந்த நாட்களில் ஒரு பகுதி தயாராகி வருகிறது. 

யால வனத்தின் பட்டனங்கல தொகுதி B பிரிவில் இந்த ஓய்வு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு சுமார் 200 வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. 

யால பூங்காவில் உள்ள வன விலங்குகளை காண தினமும் சுமார் 400 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

இதுவரை இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனப்பகுதிகளுக்குச் செல்லும் போது பகலில் ஓய்வெடுக்க ஏற்ற இடம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.