புடவையில் இருந்து வேறு ஆடைகளுக்கு மாறிய இலங்கை ஆசிரியைகள் (படங்கள்)


புடவையில் இருந்து வேறு ஆடைகளுக்கு  மாறிய இலங்கை ஆசிரியைகள்: 


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்று (21.11.2022) பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார நெருக்கடி காரணமாக புடவை அணிவதற்கு அதிக செலவாகுவதாகவும் ஆசிரியைகளுக்கு பொருத்தமான வசதியான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கையொன்றினை அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தார்.


இதற்கமைய பொது நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களின் உடையான புடவையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையெனவும் பாடசாலைகளில் எந்தவொரு ஆசிரியர்களையும் ஆசிரியர்களின் உடைகள் சம்பந்தமான எந்தவொரு அழுத்தமும் அதிபர்கள் கொடுக்கக்கூடாது எனவும்  கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்ற தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.