மின்வெட்டை அடுத்த ஆண்டு முடிவுக்கு கொண்டுவர இலங்கை திட்டம் !

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சனிக்கிழமை தெரிவித்தார்.

பெப்ரவரி 2022 முதல் இலங்கை தினசரி மின்வெட்டுகளை அனுபவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் மின்வெட்டு 13 மணி நேரம் நீடித்தது, இது இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைந்துள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்காமல் அதனைச் செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின் கட்டணத்தை மீள்திருத்தம் செய்வதே சிறந்தது எனவும் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே இலங்கைக்கான சிறந்த ஆற்றல் மூலமாகும் என்றும் விஜேசேகர கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.