அரசாங்கத்திற்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா முடிவடைந்த பிற்பாடும் கொழும்பில் தனிமைப்படுத்தலில் இருப்பதாக இம்ரான் மகரூப் தெரிவிப்பு.


தற்போது பலஅமைச்சர்களும் அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் கொழும்பிலையே தங்கி இருக்கிறார்கள். அவர்களால் அவர்களுடைய ஊருக்கும் தொகுதிக்கும் செல்ல முடியாமலும் மக்களை சந்திக்க முடியாமலும் இருக்கிறார்கள். இதனால் தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும்   இவர்கள் கொரோனா முடிவடைந்த பிற்பாடும் கொழும்பிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் .

மேலும் அவர் தெரிவிக்கையில் இவர்கள் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார்கள். மாகாண சபை தேர்தல் என்றால் அதில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் எனவும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேசினால் அதன் உறுப்பினர்களை குறைக்க வேண்டும் என்றும் அதில் மாற்றம் வரவேண்டும் எனவும் கூறுகிறார்கள். இவர்கள் இப்படி கூறுவதன் மூலம்  இவர்கள் அனைவரும் மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.