(அஷ்ரப் ஏ சமத்)

பங்களதேஷ் நாடு சுதந்திரமடைந்ததன் பின்னா்  இராணுவம், விமானப்படை, கடற்படைகள் ஆரம்பிக்கப்பட்டு 51வது வருட நிகழ்வு நவம்பா் 21 திகதி அத் தினத்தினை கொழும்பில் இலங்கையின் படைத்தளபதிகளைக் அழைத்து கொண்டாடியது கொழும்பிலுள்ள பங்களாதேஷ் தூதரகம்.

இந்நிகழ்வு பங்களதேஷ் உயா்ஸ்தானிகா் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் தலைமையில் சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

 பங்களதேஷின் பாதுகாப்பு ஆலோசகா் கொமாண்டோ எம். சைபுல் பாரியும் அவரது மனைவியும் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனா்.  

பிரதம அதிதியாக  இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் ஓய்வு பெற்ற இராணுவத் படைத்தளபதி  கமல் குணரத்தின கலந்து கொண்டார். அத்துடன் விமானப்படை, கடற்படைகள், இராணுவப் படைகளது தளபதிகள் மற்றும் அதிகாரிகளும்  

இலங்கையில் உள்ள  ஏனைய நாடுகளின் தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய பங்களதேஷ் உயர்ஸ்தானிகா்  தற்போதைய பங்களாதேஷ் பிரதமா் சேக் ஹசினாவின் தந்தையே 1971ல் பாதுகாப்புப் படைகளை உருவாக்கினாா். 

அத்துடன் இலங்கை பாதுகாப்புப் படைகள் பங்களதேஷ் கடற்படை இலங்கை துறைமுகம் போன்றவற்றினை பங்களாதேஷ் கடற்படைக்கு பாவனைக்கும், பயிற்சிகளுக்கும் உதவியுள்ளதையும் நன்றி தெரிவித்தாா். அத்துடன் பிரதமா் சேக் ஹசீனா தலைமையில் பங்களதேஷ் பாதுகாப்பு படைகள் நவீன முறையில் விருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.