வாழைச்சேனை ஆயிஷாவுக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு


வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு  (25) ஆம் திகதி ஒரு தொகை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு பயனுள்ள புத்தகங்களை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.திலீபா, ஜே.ரதிதேவி ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.

புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன், பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, நூலக ஆசிரியர் எம்.ஐ.சபீக், பகுதித் தலைவர் எம்.எல்.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.