இன்றைய தினம் (07) கம்பஹா ஸ்ரீபோதி மைதானத்தில் நடைபெற்ற FFSL - Gampaha Silver Cup கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டியில் கஹட்டோவிட்ட JF அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
அரையிறுதியில் மல்வானை Yatihana Youth அணியுடனான போட்டியிலேயே கஹட்டோவிட்ட JF அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.