(அஷ்ரப் ஏ சமத்)

தேசிய முஸ்லிம் பேரவை ஓட்டமாவடியில் உள்ள 5 பாடசாலைகளிலுள்ள 5 ஸ்மாட் வகுப்பறைகளை புனா்நிர்மாணம் செய்து ஸ்மாட் உபகரணங்களையும்  வழங்கிவைத்தனா்.

ஐந்து பாடசலைகளான  கோகுலம் வித்தியாலயம், ஆயிசா பாலிகா வித்தியாலயம், கோட்டமுனை அல் அமீன் வித்தியாலயம், அல்ஹிதாய மகா வித்தியாயலம், மற்றும் அஸ்கா மகா வித்தியாலயங்களாகும்.

இந்நிகழ்வு 04.12.2022 அன்று ஓட்டமாவடியில் நடைபெற்றது.  கொழும்பிலிருந்து தேசிய முஸ்லிம் பேரவை உறுப்பினர்கள்  மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் நேரடியாகச் சென்று  இப்பாடசாலைகளது வகுப்பறைகளை ஆரம்பித்து வைத்தாா்கள்.

இந் நிகழ்வில் தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவா் பேராசிரியா் கமல்டீன்,  கோரளைப்பற்று பிரதேச சபையின் தலைவா் ஏ.எம்.நவ்பா் உப தலைவா் அப்ஸல் மரைக்காா், மற்றும் உறுப்பினர்களான அமான் அஷ்ரப், சுஹைல் ஜமால்டீன் ஆகியோா்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனா்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.