10 மணி நேர மின்வெட்டு இல்லை! ஆனால் மின் கட்டணத் திருத்தம் இடம்பெறும்.. கஞ்சன விஜேசேகர உறுதி

2023ம் ஆண்டு 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவ்வாறான கருத்தை வெள்ளியிட்ட மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

நுரைச்சோலை அனல் மின்உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவில் ஏற்படும் தாமதத்தினால், 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

நாட்டிற்குள் நிலக்கரி தொகையானது, எதிர்வரும் 31ம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, நுரைச்சோலை அனல் மின்உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கிகளும் செயலிழக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளித்த போதே, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இன்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.