கடந்த வாரம் மாத்திரம் 1600 டெங்கு நோயாளர்கள் பதிவு !

இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது டெங்கு வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக அந்த பிரிவு எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில், அதிகளவான நோயாளர்கள் (390) கம்பஹா மாவட்டத்தில் கண்டறியப்பட்டதுடன், 272 டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2021 இல் கண்டறியப்பட்ட 27,844 நோயாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இதுவரையில் இலங்கையில் மொத்தம் 68,928 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் உள்ள 41 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.