19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கால்பந்து சம்மேளனங்கள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தன. 

இந்த முயற்சியில் இருந்து ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த அக்டோபர் மாதம் ஒதுங்கி விட்டன. இதனால் இந்தியா, சவுதி அரேபியா இடையே நேரடி போட்டி நிலவியது.

நேற்று இந்திய கால்பந்து சம்மேளனம் பின் வாங்கியதை அடுத்து சவுதி அரேபியாவுக்கு வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.

ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்து பக்ரைனில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.