இன்றைய நிலவரப்படி முழு நாடும்  திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கேற்ப நாட்டின் அரசாங்கமும் திரிபுபட்டிருப்பதாகவும், பொருளாதாரம் சீரற்றிருப்பதாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் சீரற்றிருப்பதாகவும், சுகாதார கட்டமைப்பு சீரற்றிருப்பதாகவும், மனித நடத்தை முறைகளும் சீரற்றிருப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய இந்த சீரற்ற, நிலையற்ற நிலமையை மாற்றி நாட்டை மீட்டெடுக்கும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி தான் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் அறிவுள்ள தொழில் வல்லுனர்களுக்கு செவிசாய்க்காத,விசேட நிபுனர்களுக்கு  செவிசாய்க்காத அரசாங்கத்தால் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,நிலக்கரி குறித்த நேரங்களில் இறக்குமதி செய்ய வேண்டும் என மின்சாரத்துறை பொறியாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் மெத்தனமாகவும், தவறாகவும் செயல்பட்டமை இதற்கு மிகக்கிட்டிய உதாரணம் எனவும் தெரிவித்தார்.

நிலக்கரிகளை களஞ்சியப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மின்சாரத்துறை பொறியியலாளர்களுக்கு எதிராக அமைச்சர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளினால் நாடு திரிபு நிலைக்குச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சுத் தீட்டத்தின் கீழ் 56 ஆவது கட்டமாக 3,900,000.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு இன்று (24) அன்பளிப்புச் செய்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.