இலங்கையில் 5G வலையமைப்பு - வெளியான புதிய தகவல்!
 
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5G வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5G நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4G நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான செலவை விட இரண்டு மடங்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போது நாடு இருக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் 2G மற்றும் 4G வலையமைப்புக்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டன. இந்தநிலையில் 5G என்பது அடிப்படையில் 4Gயின் மற்றொரு மேம்பட்ட பதிப்பாகும். இது நுகர்வோருக்கு அதிக திறனை வழங்குகிறது என்று திருக்குமார் நடராசா மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் அரிதாகவே, அதாவது 50 சதவீதமாகவே உள்ளது. மக்கள் தொகையில் பாதி பேருக்கு 3G போன் கூட இல்லை இந்த நேரத்தில் 5G நெட்வொர்க்(வலையமைப்பு) பயனுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5G கைபேசிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் விலை உயர்ந்தவையாகவும் உள்ளன. எனவே, 5G கைபேசி மற்றும் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய மக்களின் சதவீதமும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.