புலமைப்பரிசில் பரீட்டைக்கான வினாத்தாள்களை வழங்கும் முறைமையில் மாற்றம்!

புலமைப்பரிசில் பரீட்டைக்கான வினாத்தாள்களை வழங்கும் போது பெருமளவானோர் கோரிக்கைக்கு அமைய , இரண்டாம் பகுதியை முதலில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. 

இதன் போது கல்வித் துறையில் பெரும்பாலானவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இரண்டாம் பகுதியை முதலாவதாகவும் , முதற்பகுதியை இறுதியாகவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதி சற்று கடினமானது என்பதால் மாணவர்கள் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்கும் போது மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பரீட்சை மண்டபத்திற்குள் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி அட்டை இம்முறை வழங்கப்பட மாட்டாது.
மாணவர்கள் விடையளிக்கக் கூடிய நேரத்தை மீதப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு பதிலாக இம்முறை மாணவர்களின் வருகை பதிவு செய்வதற்கான ஆவணமொன்று மாத்திரமே பேணப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.