முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன எனவும், அதனால் பெண்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் எனவும் இது காலத்திற்கேற்ற விதத்தில் திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனவும் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. உண்மையில் அதில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏற்றுக்கொண்டு அதற்கான முயற்சியில் துறை சார்ந்தவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அப்போதைய நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு, ஜம்இய்யா தனது நிலைப்பாடுகளை மிகவும் தெளிவாக முன்வைத்துள்ளது. அந்நிலைப்பாடுகள் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு, பத்வாக் குழு, மத்ரஸாக்களின் அதிபர்கள், மூத்த ஆலிம்கள் மற்றும் துறைசார்ந்தோர், பல அமர்வுகளுக்குப் பின்னர் மிகுந்த தூரநோக்குடன் எடுக்கப்பட்ட மிகவும் விரிவான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரீஆவின் சட்டங்களில் எவற்றில் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்ள இயலுமோ அவற்றில் முடியுமான இடங்களில் ஆழமாக ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை ஜம்இய்யா எட்டியுள்ளது.

ஓரிரு தினங்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் விவாக விவாகரத்து விவகாரம் தொடர்பில் அதன் பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதாகவும் புதியதொரு நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாகவும் உண்மைத் தன்மையற்ற போலியான ஒரு வதந்தியை சிலர் பரப்பி வருகின்றனர். இவ்வாறான பொய்யான, போலியான அறிக்கைகள் மூலம் சமூகத்தை தவறாக வழிநடத்துபவர்களை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது.

இது விடயமாக மேலதிக கருத்தாடல் செய்ய விரும்பும் புத்திஜீவிகள், துறைசார்ந்தோர் எவராயினும் ஜம்இய்யாவினைத் தொடர்புகொண்டு, தாராளமாக தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொள்வதுடன், பொதுமக்கள் மத்தியில் வீணான பொய்த் தகவல்களை பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறது 

ACJU என்ற பெயரில் வெளியாகும் இது போன்ற பொய்யான அறிக்கைகள் குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்குமாறும், உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையேற்படும் பட்சத்தில், வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை ஜம்இய்யாவின் துரித இலக்கத்தை அழைத்து தெளிவுபெறுமாறும் கேட்டுக்கொள்கிறது.

இது பற்றிய அறிக்கைகளை பார்வையிட விரும்புவோர் பின்வரும் இணைப்புகள் மூலம் அவற்றைப் படித்து புரிந்து கொள்ளலாம்:

1. 2016.11.09 – முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை

English - https://acju.lk/en/news/acju-news/item/914-affairs-on-muslim-personal-law 

தமிழ் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/913-2016-11-10-06-35-40

2. 2017.04.03 – முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சம்பந்தமாக ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவுரை

English - https://acju.lk/en/news/acju-news/item/1108-acju-and-the-mmda-a-statement-of-clarification

தமிழ் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/997-2017-04-26-13-30-53 

3. 2017.12.21 – முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை (MMDA). (8 pages)

Report was signed by – Mufti M.I.M. Rizwe, Ash Shaikh M.M.A. Mubarak, Hon. Justice A.W.A. Salam, Hon. Justice Mohamed Mackie, Mr. Shibly Aziz PC, Mr. Faisz Musthapha PC, Dr. M.A.M. Shukri, Mr. Nadvi Bahaudeen, Mrs. Fazlet Shahabdeen

https://acju.lk/en/news/acju-news/2830-report-mmda

4. 2018.02.16 – முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்

தமிழ் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/1241-2018-02-16-09-00-09

5. 2018.07.23 - முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவு ஆவணம். (14 pages)

https://acju.lk/en/news/acju-news/2831-parliament-report

6. 2018.07.30 – முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பான விடயங்கள் முன்னாள் நீதியமைச்சர் கௌரவ. மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது.

தமிழ் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/1360-2018-07-30-11-22-41 

7. 2018.10.10 – முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

தமிழ் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/1406-2018-10-13-16-03-50

8. 2021.07.01 – ஊடக அறிக்கை – 'முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட விடயத்தில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக'.

English - https://acju.lk/en/news/acju-news/item/2210-mmda-decisions

தமிழ் - https://acju.lk/news-ta/acju-news-ta/item/2209-mmda-decisions 

9. 2021.11.11 - முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மார்க்க அறிஞர்கள் ஒன்றியத்தின் அறிக்கை

https://acju.lk/news-ta/acju-news-ta/2336-mmda-scholar-report


அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்ப

தில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.