யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு

TestingRikas
By -
0
யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)