நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரி விநியோகம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஆலையின் கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறுகிறது.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஆலையில் இரண்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான கிட்டத்தட்ட எழுபத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஆலையில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அடுத்த சில நாட்களில் அனல்மின் நிலையத்தை இயக்க முடிந்தாலும், தேவையான நிலக்கரியை வழங்க முடியாவிட்டால், எந்த வகையிலும் ஆலையை இயக்க முடியாது என்கின்றனர்.

தற்போது ஆலைக்கு சொந்தமான இரண்டாவது இயந்திரமும் கடந்த இருபத்தி இரண்டாம் திகதியில் இருந்து சேவையில் இருந்து அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.