கொலை செய்யப்பட்ட நாட்டின் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் இன்று(18) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளன.

பொரளை பொது மயானத்தில் தமது காருக்குள் கழுத்து நெரிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டார்.

பின்னர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவு உயிரிழந்தார். 

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட 04 குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.