நேற்றிரவு (18) ஹங்வெல்ல குறுக்கு வீதிக்கு அருகில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஹங்வெல்ல உணவகம் ஒன்றின் முஸ்லிம் உரிமையாளர் பர்ஸான் என்ற 46 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் தனது உணவகத்திற்குள் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.