ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சை வெடித்த பிறகு இவ்விரு அணிகள் சந்திக்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியமானதாகும். நாளை அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.