இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஹீராபென் மோடி ஸ்ரீமதியின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். தனது அன்பிற்குரிய தாயை இழந்து வாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன..” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.