இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் -  ரோஹிங்யா பிரஜைகள் 103 பேரை, மிரிஹானை தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு மல்லாகம் நீதிவான்நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இதன்போது கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்ட படகோட்டியாக செயற்பட்டதாக கூறப்படும் இலங்கையரை மட்டும் 14 நாட்களுக்கு விலக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

மியன்மாரிலிருந்து இந்தோனேசியா நோக்கி, ரோஹிங்யா பிரஜைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று, இயந்திரக் கோளறு காரணமாக அனர்த்தத்துக்குள்ளானது.

குறித்த படகு யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பிற்குள்  சனிக்கிழமை (17) அனுமதியின்றி பிரவேசித்துள்ளதுடன் அதிலிருந்த ரோஹிங்யா  பிரஜைகள் அனைவரும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அவர்கள் அனைவரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு துரித கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர் நேற்று   மாலை அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் பகுதிக்கு மல்லாகம் நீதிவான்  சென்று பார்வையிட்டார்.

 இதன் போது, ரோஹிங்யா அகதிகளின் நலனுக்காக,  சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின்  ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான  ரஜீந்ரன் ராமசந்ரன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முன்னிலையாகினர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இதன்போது அங்கு பிரசன்னமகைனர்.

 இதன்போது ரோஹிங்யா பிரஜைகளுக்காக சட்டத்தரணிகள் முன் வைத்த விடய்ங்கலை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான், அவர்களை மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பவும், அவர்கள் தொடர்பில் அரசாங்கமும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இணைந்து பொருத்தமான நடவடிக்கையினை எடுக்கவும் ஆலோசனை வழங்கினார்.

  எனினும் இதன்போது ரோஹிங்யா பிரஜைகளை கடத்திய படகினை செலுத்தியதாக கூறப்படும் இலங்கையரை  விலக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தர்விட்டுள்ளார்.

 இந்நிலையில், ரோஹிங்யா பிரஜைகள் யாழிலிருந்து மிரிஹானைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.