வெளிநாடு செல்வதற்கு தடை
** வாராவாரம் ஞாயிறு தோறும் சிஐடியில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று (16) விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோட்டை நீதவான் திலின கமகே அவருக்கு பிணை வழங்கியுள்ளார். ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவாததாரர்களின் வசிப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் சொத்துச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை, குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் திலினி பிரியமாலிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மதிப்பிழந்த காசோலைகள் தொடர்பான பணத்தையும் செலுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். திலினி ப்ரியமாலிக்கு முன்னர் தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் 8 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அந்த வழக்குகளுக்காக அவருக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.