சிறந்த சூழலை உருவாக்குவதன் மூலம் சிறுவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்க முடியும்

Rihmy Hakeem
By -
0

 


சிறுவர்கள் வாழக்கூடிய சிறந்த சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்க முடியும் என்று சிறுவர் நோய் விசேட நிபுணர் டொக்டர் பேராசிரியர் பூஜித் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,சிறுவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுவிப்பது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும். 

பாடசாலைகளில் மாத்திரமன்றி வீடுகளிலும் பெற்றோர் சிறுவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளின் நடத்தையிலும் அவர்களுடன் பழகுபவர்களையும் நன்கு அவதானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)