ஜோர்தான் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் மற்றுமொரு ஆட்கடத்தல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் குழு தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் அண்மைய நாட்களில் விசாரணை நடத்தியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா விசாக்கள் மூலம் ஜோர்தானுக்கு புறப்படும் மக்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தாம் ஜோர்தானுக்கு குறுகிய விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் வழங்கிய தகவலின்படி, 10 நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஜோர்தானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் என ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.