(அஷ்ரப் ஏ சமத்)

மகரகம கபூரியா அரபிக் கல்லுாாியின் பழைய மாணவா்கள்  இன்று 2 ஆம் திகதி ஜூம்ஆத் தொழுகையின் பின்னா் கிராண்பாஸ் வீதியில் உள்ள சுலைமான் வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியின் முன் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள்.
கபூரியா அரபிக் கல்லுாரிக்கு காலம் சென்ற கொடைவல்லல்  கபூர் ஹாஜியாரினால் வக்பு  அரபிக் கல்லுாாிக்கு நன்கொடை செய்யப்பட்ட  சுலைமான் வைத்தியசாலை சுமாா் 3 ஏக்கா் காணியை சொப்லொட்ஜ்  எனும் தனியாா் கம்பனிக்கு  விற்கப்பட்டு அங்கு நிர்மாணங்கள் நடைபெற்று வருகின்றன.   கபூர் ஹாஜியாரின்   கொள்ளுப் பேரன் என்ற உறவு முறையான அஸ்மி கபூர் என்பவரே முறையற்ற முறையில் தஸ்தாவேஜூகள் தயாரித்து காணியை  விற்றுள்ளாா்.  
 
 90 வருடங்களுக்கு முன்பே  காலம் சென்ற கபூர் ஹாஜியார் மற்றும் காலம் சென்ற சுலைமான் வைத்தியா் இதன் வருமானம் சகல சொத்துக்களும் கபூர் அரபிக் கல்லுாாிக்கு கிடைக்க வேண்டி உயில் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  கடந்த 2 வருடகாலமாக  அஸ்மி கபூர் எனும் கொள்ளுப்  பேரன் முறையிலானவா்  சட்டரீதியற்ற முறையில்  காணி உறுதி தயாரித்து இதனை விற்றுள்ளதாக பழைய மாணவா்  டில்சான் மொஹமட் தெரிவித்தாா்.

மேலும் மகரகமவில்  அரபுக் கல்லுாாிக்குச் சொந்தமான காணியில் 2 ஏக்கரை மட்டும் அரபிக் கல்லுாாிக்கு வைத்துவிட்டு ஏனைய  13 ஏக்கரை விற்பதற்காக  தடுப்புச்  சுவா்இட்டு அதனையும் விற்பதற்கு முயற்சித்து வருகின்றாா்.  இதனால் அங்கு விடுதி தொழுகை அரைகள் மாணவா்கள் ஆசிரியா்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்டெடுப்பதற்காக கடந்த 75 வருட காலத்தில் இக் கல்லுாாியில் கற்ற  ஆயிரக்கணக்கான மௌலவிமாா்கள் விழித்தெழுந்துள்ளனா். இதனை நாங்கள் காப்பாற்ற முற்படுவோம். முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் வாதிதிகள், சட்டத்தரணிகள் ஒன்றுபடுமாறும் இதனை மீட்டெடுத்து தருமாறும் கருத்துக்களைத் தெரிவித்தனா்

அதனை தடுக்குமாறும். மகரகம கபூரியா அரபுக் கல்லுாிக்கு வக்பு செய்யப்பட்ட சுலைமானியா வைத்தியசாலைக்காணி எவ்வாறு விற்கப்படடது என்பதை உடனடியாக அரசாங்கம் நீதியமைச்சு, சி.ஜ.டியினா் நீதி வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட ஆயிரக்ணக்கான பழைய மாணவா்கள் மௌலவிமாா்கள் இணைந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் 

.. இதில் முன்னாள் ஆளுனா் ஆசாத் சாலி பழைய மாணவா் செயலளா்  லில்சாத் மொஹமட் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.