சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படும்- பிரதமர்

எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பைப் பேணுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் வசதிகளை குறைக்காமல் செயற்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்

கருத்துகள்