சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) பெய்த கனமழை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு நாட்டை விட்டு நகரும் போது, ​​நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் இன்று மாலை முதல் குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.