பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும் போகத்தில் பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

குறித்த பணத்தை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1 ஹெக்டேர் நெல் வயல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாயும், அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும் வரவு வைக்கப்படவுள்ளது..

இதனிடையே, பயிர்செய்கைக்காக அரசாங்கம் வழங்கும் உரங்கள் தரமானதாக இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.