சம்மாந்துறை திராஸாத்துல் இஸ்லாமிய்யா அரபு கலாபீடத்தின் முழு நேர பெண்களுக்கான பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு
சம்மாந்துறை திராஸாத்துல் இஸ்லாமிய்யா அரபு கலாபீடத்தின் முழு நேர பெண்களுக்கான பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று திராஸாத்துல் இஸ்லாமிய்யாவின் நிறைவேற்று பணிப்பாளரும் , சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான அல்-ஹாஜ் KMKA. றம்ஸீன் காரியப்பர் தலைமையில் கலாபீடத்தின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலாபீடத்தில் அதிகமான மாணவர்கள் அல்-ஆலிமா மார்க்க கல்வியை தொடர புதிதாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து, திராஸாத்துல் இஸ்லாமிய்யாவின் அடுத்த மைல்கல்லான பெண்களுக்கான முழுநேர பாடநெறியின் முதலாவது கன்னி நிகழ்வாக இது அமைந்திருந்தது.
அதிதிகள் வரிசையில் பிரதம பேச்சாளராக முன்னால் அல்-மனார் கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதய ரைஸ் சிறிலங்கா அமைப்பினுடைய தலைமை நிறைவேற்று பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் A. அக்ரம் (நழீமி) பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.