Galle Gladiators அணி வெற்றி

 Colombo Stars மற்றும் Galle Gladiators அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

 போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Galle Gladiators முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 Galle Gladiators அணி சார்ப்பில் லஹிரு உதார ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்

 அதனடிப்படையில் Colombo Stars அணிக்கு 175 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

Colombo Stars அணி சார்ப்பில் நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

 அதனடிப்படையில் 25 ஓட்டங்கள் வித்தியசாத்தில் Galle Gladiators அணி வெற்றி பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.