சிறப்பாகவும் முன்னுதாரணம் மிக்கதாகவும் நடைபெற்ற காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்கா - கஷ்டோவிட்டியின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.

கஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா மற்றும் நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான அமைதிப் பேரணி ஒன்று நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முபாரக் மௌலானா தக்கியாவின் முகத்தம் அல் ஹாஜ் அப்துஸ்ஸமீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஊர்வலம் நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் ஊரிலுள்ள பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள்,சகோதர தரீக்காக்களை சேர்ந்தவர்கள், ஊர்ப்பிரமுகர்கள்,பொதுமக்கள், திஹாரிய தக்கியா மத்ரஸா ஆலிம் உட்பட மாணவர்கள், இளைஞர்கள் , சிறுவர்கள் மற்றும் முரீதீன்கள் முஹிப்பீன்கள் என பல்வேறு பட்ட தரப்பினரும் கலந்து கொண்டு இப்பேரணிக்கு தமது ஆதரவை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வுக்கு நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,வீரங்கொல்ல பிரிவு பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணைய உறுப்பினர் அல் ஹாஜ் எம் எம் முஹம்மத் அவர்கள்,கிராம பாதுகாப்பு கமிட்டி தலைவர்களான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் 369ஏ பிரிவு , அல் ஹாஜ் நூருள்ளாஹ் 369 பிரிவு , மற்றும் முன்னால் பிரதேச சபை வேட்பாளர் அல் ஹாஜ் ருஸ்தி, பாதிபிய்யா தக்கியா கலீபா மௌலவி  இஜ்லான் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீக தலைவர் கண்ணியத்துக்குரிய அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு முஹம்மத் ஹபிழஹுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் ஒவ்வொரு தக்கியாக்கள் அமையப்பெற்றுள்ள ஊர்களிலும் நடைபெற்று வரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வின் ஓர் அங்கமாக மேற்படி 'போதைப்பொருள் இல்லாத பிரதேசமாக மாற்றுவோம்" என்ற தொணிப்பொருளில் கஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா மற்றும் நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி அமைதிப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் ஒருங்கிணைப்பதிலும் நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்காகவும் சமூக சேவகர் மற்றும்  கஹட்டோவிட்ட 369 ஏ கிராம பாதுகாப்பு தலைவர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள்  ஒத்துழைப்பு நல்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

விசேட உரை நிகழ்த்திய நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உரையில் இதுவரை காலமும் போதைப்பொருள் தொடர்பான பார்வையை தாம் மாத்திரம் பார்த்து வந்ததாகவும் இனிமேல் தமது பொலிஸ் பிரிவுடன் ஊரிலுள்ள நீங்கள் அனைவரும் இக்காரியம் தொடர்பில் அவதானமாக இருப்பதால் தமது காரியம் இன்னும் இலகுவாகிவிட்டதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மிகவும் குறுகிய காலத்துக்குள் இப்பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்ற முடியும் எனவும் இதற்காக பொலிஸ் நிலையம் சார்பாக என்ன உதவி தேவைப்பட்டாலும் எந்த நேரத்திலும் வழங்க தயாராக இருப்பதாகவும்,இரவு வேலைகளில் நடமாடும் பொலிஸ் பிரிவின் சேவை தேவையெனில் அதைக்கூட வழங்க தயாராக இருப்பதாகவும் தமது மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கௌரவ தேசபந்து தென்னகோன் அவர்களின் பிரதான எண்ணக்கருவே போதைப்பொருள் ஒழிப்பு எனவும் இதற்காக தமது நிலையம் எப்போதும் முன்வந்துதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.