இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்று (13) காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுவரெலியா, கண்டி, பொலன்னறுவை, அம்பாறை, வவுனியா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தி நேற்று செலுத்தியிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஜனநாயக ஐக்கிய முன்னணி நேற்றைய தினம் செலுத்தியிருந்தது.

கம்பஹா, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை தேசிய ஜனநாயக முன்னணி செலுத்தியுள்ளது.

அத்துடன் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தி நேற்று செலுத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி, ஜனதா சேவக கட்சி, சிங்களதீப தேசிய முன்னணி, புதிய ஜனநாயக மார்க் லெனினிஸ்ட் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் நேற்று பல மாவட்டங்களுக்கு கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர நேற்று 11 சுயேச்சைக் குழுக்களும் இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.