11கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை மறைத்து இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானக் கண்காணிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து இந்தியாவின் சென்னை வழியாக குறித்த பெண் நாட்டுக்கு வந்துள்ளார்.

இந்த பெண்ணின் உடமைகளை சோதனையிட்டதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கெரட் நெக்லஸ்கள், மோதிரங்கள் மற்றும் வளையல்கள் அடங்கிய நகைகள், 24 கெரட் தங்கத் தகடுகள் 27 மற்றும் திரவத் தங்கம் அடங்கிய 8 கேப்சூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகைகள் வெள்ளியால் நேர்த்தியாக முலாம் பூசப்பட்டிருந்ததுடன் தங்கத் தகடுகள் வங்கி அட்டைகளாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நகைகள் மற்றும் தங்கத் தகடுகளின் மொத்த எடை 4,892 கிராம் மற்றும் சந்தை மதிப்பு 11 கோடி ரூபாவை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.