கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 3 கடைகளுக்கு 7 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​குறித்த 3 விற்பனை நிலைய உரிமையாளர்களும் முட்டைகளை அதிகமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைபை்படுத்தப்பட்டனர்.


இறைச்சி மற்றும் இறைச்சி தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் தெஹிவளை பிரதேசத்தில் இயங்கிவரும் விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கல்கிஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இதேவேளை, பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரதான முட்டை விற்பனை நிலையமொன்றிற்கு ஒரு இலட்சம் ரூபாவும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள முட்டை மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் (27) நேற்று தீர்ப்பளித்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.