நுவரெலியா, நானுஓயா - ரதல்ல வீதியில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறவினர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (21) இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அதன்படி, அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் ஹட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.


விபத்துக்கு விசனம் தெரிவிக்கும் வகையில் திக்கோயா நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் 14 வயது சிறுவனும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.