இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பெற்ற மோசமான தோல்வி குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தேசிய அணி முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.


இந்த அறிக்கையில் தோல்வி குறித்து அணித்தலைவர், தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு, அதேபோன்று அணி முகாமையாளரின் விளக்கம் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஐந்து நாட்களுக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அணி முகாமையாளரை இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுள்ளது.


திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 317 ஓட்டங்களால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வியை சந்தித்ததோடு துடுப்பாட்டத்தில் 22 ஓவர்ளுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.


அணியின் இந்த மோசமான ஆட்டத்துக்கான பின்னணியை புரிந்து கொள்வதற்கும் மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இந்த அறிக்கை உதவும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.