இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 75- ம் ஆண்டு பவளவிழா மாநாடு மார்ச் 10-ம் தேதி நடைப்பெறுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து
தேசிய தலைவர்பேராசியர் கே.எம்., காதர்மொக தீன் நிர்வாகிகளுடன் அழைப்பு
சென்னை நடக்கும் தொடக்க விழாவிலும் புதுதில்லில் நடைப்பெறும் நிறைவு விழாவிலும் பங்கேற்பதாக உறுதியளித்தார்
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில்
தமிழக முதலமைச்சரும்தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை 10.01 2023 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தலைமையில் கேரளா மாநில தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கள்,
தேசிய பொதுச் செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்சாலிகுட்டி,
பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், அப்துல் வஹாப், அப்துல் சமது சமதாணி, கே. நவாஸ் கனி,
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான்,
மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர்
எஸ்.அன்சாரி மதார்
ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீதுஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசியர் கே.எம்.காதர்மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவளவிழா மார்ச் 10 -ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் தொடக்கவிழா நடத்தவுள்ளோம்.
சென்னையில் நடக்கும் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தோம். அவர் கலந்து கொள்வதாக தெரிவித்தார். மாநாடு சென்னை கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலை (ஒ.எம்.ஆர். சாலை ) யில் மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. முன்னதாக காலை மணி அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி இடமான ராஜாஜி ஹாலில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பவள விழா ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி புதுதில்லியில் பவள விழா நிறைவு விழா நடைபெறுகிறது. இவ்விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம். அவர் பங்கேற்பதாக தெரிவித்தார். அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கெண்டோம். நல்லாட்சி தொடரவும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டோம் இவ்வாறு அவர் கூறினார்.