சாரதி, நடத்துனர்களின் வெற்றிடங்கள் காரணமாக நாளாந்தம் 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும், அதற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுவரையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1,200 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.