காபூல்: ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து ஒன்றரை வருடங்களான நிலையில் நவீன கார் ஒன்றை தலிபான்கள் உத்தரவின்பேரில் பொறியியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் உள்ள டெக்னிக்கல் வெகேஷனல் என்ற நிறுவனத்தின் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு நவீன கார் ஒன்றை வடிவமைத்துள்ளது.

தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் உள்நாட்டு கார் இதுவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடா 9 (Mada 9) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் புகைப்படத்தை, தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சபிமுல்லா முஜாகீதின் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆப்கனில் ஆட்சி அமையும் என்று அவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும், தகவல் தொழில் நுட்பம், கனரக வாகனங்களில் உற்பத்தியில் வளர்ச்சி அடைவோம் என்று உறுதியளித்தனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.