இலங்கையனாகப் பிறந்து விட்டால்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்பது
இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது ...

இயற்கை அனர்த்தம் வென்று...
இனவாதம் வென்று....
பெருந்தொற்று வென்று....
பெருமூச்சு விட்டு
கால்பதித்தோம் 
இரண்டாயிரத்து  இருபத்திரண்டில்.

இளம் சந்ததி
அறியாத ஒன்றை
அறிமுகப் படுத்தியது
அவ்வாண்டு.

 புதுப்புது அனுபவங்கள்...

பஞ்சம் எனும் பெயரால்
எதிலும்
பற்றாக்குறை கண்டோம்.

ஆதிகால வாழ்க்கைக்கு
மீண்டும் சென்று வந்தோம்.

பாதைகள் எங்கிலும்
சைக்கிள்கள் கண்டோம்.

ஊருக்குள் ஆண்களை
கால்நடையில் கண்டோம்.

பெண்கள் சேருமிடங்களில்
விறகைப் பற்றியே
விசாரித்துக் கொண்டோம்.

விறகடுப்பில்
விரைவாக சமைப்பது எப்படி ?
Staff room இலும்
பட்டிமன்றம் நடத்தினோம்.

பக்குவமாய் 
gas ஐ மீதப்படுத்த எண்ணியதால்
கறிச்சட்டிகள் தீய்ந்து போகாமல்
சமைத்து சாதித்தோம்.

நுவரலியாவை  தரிசிக்காமலும்
விடுமுறையைக் கழிக்கலாம்  என்று
நம்பிக்கையும் கொண்டோம்

இல்லை என்ற சொல்லை
பஞ்சமேயின்றி
செவி தொடக் கேட்டோம்,

ஆண்டாண்டு கழிந்தாலும் 
மறக்க முடியாத
நினைவுகளை
அளித்துச் சென்றது
கடந்த வருடம்.

ஆக....
2022 ....
நீ கற்றுத் தந்தது 
ஏராளம் இருக்கலா.ம்..

நான் கற்றுக் கொண்டது
 ஒன்றே ஒன்றுதான்.

தேவைகளையும் ஆசைகளையும் பிரித்தறிந்து

சிக்கனமும் வாழ்வின் ஓர் அம்சம் என
உணந்து கொண்டேன்..

நன்றிகள் கோடி  உனக்கு ...🖤🖤

பஸ்மினா ராஸிக் 
கஹட்டோவிட 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.