யாழ் மாநகரசபைக்கு மீண்டும் புதிய முதல்வர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 2 ஆவது முறையாகவும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து முதல்வர் வி.மணிவண்ணன். தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஏற்றபட்ட குழப்பமான சூழல் ஏற்பட்டதையடுத்து, உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில், மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதக் அறிவித்தார்.
எனினும் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் அது குறித்த வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.