தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சில நிறுவனங்களின் ஆதரவு மந்தகதியில் காணப்படுவதாக இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.