கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதைத் தடைசெய்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழு, இரு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாய்ந்தமருதைச் சேர்ந்த அஹமட் லெப்பை மொஹமட் சலீம் மற்றும் அஹமட் ரஹீம் மொஹமட் அஸீம் ஆகிய இருவர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் வசிக்கும் பகுதி சாய்ந்தமருது நகர சபைக்கு சொந்தமானது என்றாலும், கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கி அண்மைய வர்த்தமானியில் குறிப்பிடப் பட்டிருந்தமைக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டமை குறி்ப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.