அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்யுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோய்த்தொற்றுக்கள் இரண்டும் அதிகரித்து வருவதால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானது என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
எனவே இரத்தப் பரிசோதனையின் மூலம் இவ்விரு நோய்களையும் தனித்தனியாகக் கண்டறிந்து மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு மற்றும் இன்புளுவென்சா ஆகிய இரண்டின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் நோயாளியின் உடல்நிலையை கண்டறியாமல் கொடுக்கப்படும் மருந்துகளால், அண்மைய நாட்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக