பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நாளை மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.