2022 உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று(17) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

2022 க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.